சோளிங்கரில் மழை

சோளிங்கரில் மழை பெய்தது.

Update: 2022-08-24 18:15 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள எரும்பி, கீழாண்ட மோட்டூர், கொண்டபாளையம், எசையனூர், உள்ளிட்ட கிராமங்களில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து மாலையில் சுமார் ஒரு மணிநேரம் காற்றுடன்‌ மிதமான மழை பெய்து. இதனால் சாலைகளிலும், தெருக்களிலும் மழை வெள்ளம் ஓடியது. தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்தது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்