ஈரோட்டில் மழை

ஈரோட்டில் மழை பெய்தது.;

Update: 2022-06-30 21:52 GMT

ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இந்த நிலையில் நேற்று காலையிலும் வெயில் வழக்கம்போல் அடித்தது. இதைத்தொடர்ந்து மதியம் வானில் கருமேகங்கள் தோன்றின. பின்னர் மதியம் 2.15 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது.

இந்த மழை பிற்பகல் 3 மணி வரை பெய்தது. அதன் பின்னரும் தூறிக்கொண்டே இருந்தது. திடீரென மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு சென்ற மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். இந்த மழை காரணமாக மாலையில் குளிர்ந்த காற்று வீசியது.

Tags:    

மேலும் செய்திகள்