2-வது நாளாக மழை

2-வது நாளாக மழை;

Update: 2023-09-08 18:45 GMT

கூத்தாநல்லூர் பகுதியில் கடந்த 2 மாதங்களாக கடுமையான வெயில் சுட்டெரித்தது. நேற்றுமுன்தினம் மாலை கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை வழக்கம் போல வெயில் சுட்டெரித்தது. அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து நேற்று மாலை கூத்தாநல்லூர் பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழை தண்ணீர் தேங்கி நின்றது.

அதேபோல் திருமக்கோட்டை, வல்லூர், கோவிந்தநத்தம், மேலநத்தம், மான்கோட்டைநத்தம், பாளையக்கோட்டை, தென்பரை, ராதாநரசிம்மபுரம், ராஜகோபாலபுரம் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்