குமரியில் மழைக்கு 2 வீடுகள் சேதம்

குமரியில் மழைக்கு 2 வீடுகள் சேதம்;

Update: 2022-11-20 18:45 GMT

நாகர்கோவில், 

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதைதொடர்ந்து பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வந்தது. இதனால் அணைகளின் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. அணைகளில் இருந்து அதிகளவில் தண்ணீரும் திறந்துவிடப்பட்டன. எனவே ஆறு, கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தற்போது கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில் மழை குறைந்து காணப்படுகிறது. மேற்கு பகுதியான குழித்துறையில் நேற்று 18.2 மில்லி மீட்டர் மழை பதிவானது. மழைக்கு நேற்று ஒரே நாளில் 2 வீடுகள் தேசதமடைந்துள்ளன. தோவாளை தாலுகாவில் ஒரு வீடும், விளவங்கோடு தாலுகாவில் ஒரு வீடும் ஆகும்.

மழை குறைந்துள்ளதால், அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டுள்ளது. சிற்றார் 1 அணைக்கு வினாடிக்கு 160 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 275 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. பேச்சிப்பாறை அணை 43 அடி கொள்ளளவு எட்டியதால், அங்குள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைக்கு வினாடிக்கு 724 கனஅடி நீர் வரத்தும், அணையில் இருந்து வினாடிக்கு 225 கனஅடி நீரும் திறக்கப்பட்டன. மாநகர மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் முக்கடல் அணைக்கு வினாடிக்கு 8.6 கனஅடி நீர் வரத்தும், அதே அளவு நீர் குடிநீருக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்