மாவட்டத்தில் பரவலாக மழை

மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.;

Update: 2023-04-29 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்தது. வெளியில் செல்ல முடியாத வகையில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக லேசான மழை அவ்வப்போது பெய்து வருகிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் சில இடங்களில் கன மழையாகவும், பல பகுதியில் சாரல் மழையாகவும் பெய்து வந்தது. நேற்று மாலையும் திடீரென்று வானில் கருமேகங்கள் சூழ்ந்து மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக ராமநாதபுரம், உச்சிப்புளி, கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. பலத்த காற்றுடன் பெய்த மழையால் மாவட்டத்தில் நிலவி வந்த வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மழையால் ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகே இருந்த பழமையான மரம் சாய்ந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் சுமார் 4 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்