சோலார், தாளவாடி பகுதியில் சாரல் மழை

சோலார், தாளவாடி பகுதியில் சாரல் மழை;

Update: 2022-11-27 18:45 GMT


ஈரோடு அருகே சோலார் சுற்று வட்டாரத்தில் உள்ள 46 புதூர், நஞ்சை ஊத்துக்குளி, லக்காபுரம், கஸ்பாபேட்டை, அவல்பூந்துறை உள்ளிட்ட இடங்களில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் ஈரப்பதம் வயல்வெளிகளில் அதிகரித்து காணப்பட்டது.

சாலைகளில் ஈரப்பதம் இருந்ததுடன் ஒரு சில இடங்களில் மழை நீர் வழிந்து ஓடியது. அதிகாலை பெய்த மழையால் மஞ்சள், கரும்பு, சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு போதிய ஈரப்பதம் காணப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் லேசான குளிர் காற்றும் வீசி வருகிறது. இதனால் சோலார் சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தாளவாடி, தொட்டகாஞ்சனூர், கும்டாபுரம், ஓசூர், சிக்கள்ளி, தலமலை, ஆசனூர், திம்பம் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்தது. இந்த நிலையில் நேற்று காலை முதல் மாலை வரை தாளவாடி பகுதியில் மேகமூட்டம் காணப்பட்டது. மாலை 6 மணிக்கு மிதமான மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இரவு 7 மணி வரை நீடித்தது. பின்னர் மழைத்தூறிக்கொண்டே இருந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்