திருவாடானை, தொண்டி தபால் நிலையங்களில் ெரயில் டிக்கெட் முன்பதிவு வசதி மையம்

திருவாடானை, தொண்டி தபால் நிலையங்களில் ெரயில் டிக்கெட் முன்பதிவு வசதி மையம் அமைக்க கோரி நவாஸ்கனி எம்.பி.யிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-09-10 18:43 GMT

தொண்டி, 

திருவாடானை யூனியன் மங்களக்குடி ஊராட்சி தலைவர் அப்துல் ஹக்கீம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் நவாஸ்கனி எம்.பி.யிடம் நேரில் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- திருவாடானை தாலுகாவைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சென்னை, கோவை, போன்ற பெரு நகரங்களிலும் கர்நாடக மாநிலம் பெங்களூரு, கேரளா போன்ற பல மாநிலங்களிலும் தொழில், வியாபாரம், வேலை வாய்ப்பு போன்ற பல அம்சங்களின் அடிப்படையில் வசித்து வருகின்றனர். திருவாடானை தாலுகாவை சேர்ந்த பொதுமக்கள் அடிக்கடி தங்களது பணி நிமித்தமாக தலைநகரமான சென்னைக்கு சென்று வருகின்றனர். முதியவர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உடல்நலக்குறைவுகளால் பாதிக்கப்பட்டவர்கள்சென்று வருகின்றனர். இவர்கள் பயணம் செய்வதற்கு ெரயில் பயணம் தான் ஏதுவாக இருந்து வருகிறது. அப்படி ெரயில் பயணம் செய்வதற்காக இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் முன்பதிவு செய்வதற்கு மாவட்ட தலைநகரான ராமநாதபுரத்திற்கோ, 40 கிலோமீட்டர் தூரம் உள்ள காரைக்குடி அல்லது தேவகோட்டை ரஸ்தாவில் உள்ள ெரயில் நிலையங்களில் தான் முன்பதிவு செய்ய வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு கால விரயமும் பொருளாதார இழப்பும் இருந்து வருகிறது. ஏற்கனவே திருவாடானை தபால் நிலையத்தில் ரெயில் முன்பதிவு வசதி செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் பயனடைந்தார்கள். ஆனால் திடீரென கடந்த ஓராண்டுக்கு முன்பு ெரயில் முன்பதிவு வசதியை நிறுத்திவிட்டனர். இதனால் இப்பகுதி மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். எனவே திருவாடானை, தொண்டி, மங்கலக்குடி, எஸ்.பி. பட்டினம், வெள்ளையபுரம் தபால் நிலையங்களில் ெரயில் முன் பதிவு மையத்தை ஏற்படுத்தி தர நாடாளுமன்ற உறுப்பினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்