ரெயில்வே ஓய்வூதியர்கள் சங்க கூட்டம்

கோவில்பட்டியில் ரெயில்வே ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் நடந்தது.

Update: 2022-10-08 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி ெரயில் நிலைய வளாகத்தில் ெரயில்வே ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கவுரவ தலைவர் ஹரிஹர சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சங்கச் செயலாளர் தங்கவேலு வரவேற்றார். மகளிர் அணி தலைவி பட்டம்மாள் தீர்மானங்களை விளக்கிப் பேசினார். சங்க பொருளாளர் முருகையா வரவு- செலவு சமர்ப்பித்தார்.

கூட்டத்தில், பாராளுமன்ற நிலைக்குழுவின் 110-வது அறிக்கை பரிந்துரைத்தபடி ஓய்வூதியர்கள் மருத்துவப்படியை ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும். மத்திய அரசு மருத்துவ திட்டத்தில் பதிவு செய்துள்ள ஓய்வூதியர்களுக்கு பெறக்கூடிய சிகிச்சையின் மருத்துவச் செலவை அரசு ஈடு செய்ய வேண்டும். ஓய்வூதியதாரர்கள் முறையே 65, 70, மற்றும் 75 வயதை நிறைவு செய்யும்போது அவர்களின் ஓய்வூதியம் முறையே 5, 10, மற்றும் 15 சதவீதமாக உயர்த்தி கொடுக்க வேண்டும். ஓய்வூதியதாரர்களுக்கு விதிமுறைகளை முறைப்படுத்தி வருமான வரி செலுத்துவதில் முழு விலக்கு அளிக்க வேண்டும். ஓய்வூதியதாரர்களுக்கு 2020 ஜனவரி 1 முதல் 2021 ஜூன் 30 வரை கொடுக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலை நிவாரணத் தொகையை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்