ரெயில்பாதை பராமரிப்பு பணி - விரைவு ரெயில் போக்குவரத்தில் மாற்றம் - தென்னக ரெயில்வே அறிவிப்பு

ரெயில்பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக விரைவு ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

Update: 2022-11-04 07:02 GMT

சென்னை,

தென்னக ரெயில்வே வெலியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ரெயில்பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக நவ.7 முதல் 12 ஆம் தேதி வரை மதுரை - செங்கோட்டை இடையிலான ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

மதுரை - விழுப்புரம் விரைவு ரெயில், நவ.8, நவ.10-12, நவ. 28-30 வரை மதுரை - திண்டுக்கல் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.

பாலக்காடு - திருச்செந்தூர் விரைவு ரெயில், நவ.18, 19, 21, 22 ஆகிய நாட்களில் கோவில்பட்டி - திருச்செந்தூர் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.

கோவை - நாகர்கோவில் விரைவு ரயில், சென்னை - குருவாயூர் விரைவு ரெயில் நவ.22, 25, 26ல் தாமதமாக நெல்லை செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவ.30 ஆம் தேதி மதுரை - செகந்திராபாத் சிறப்பு ரயில் 45 நிமிடங்கள் தாமதமாக காலை 6.15 மணிக்கு புறப்படும். நவ.22, 25, 26ல் வாஞ்சி மணியாச்சியில் தூத்துக்குடிக்கு இணைப்பு ரயில் சேவை கிடையாது என்று தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்