பெரம்பலூர் வழியாக ரெயில் சேவை
பெரம்பலூர் வழியாக ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது.;
தமிழகத்தில் ரெயில் போக்குவரத்து வசதி இல்லாத ஒரே மாவட்டமாக பெரம்பலூர் உள்ளது. பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு திட்டமான ரெயில் போக்குவரத்து தொடங்க வேண்டும் என்று பெரம்பலூர் தொகுதி எம்.பி. பாரிவேந்தர் நாடாளுமன்றத்தில் பேசி ரெயில்வே துறை மந்திரிக்கு கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்று பெரம்பலூர் வழியாக அரியலூர், நாமக்கல்லுக்கு ரெயில் சேவை தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதை தொடர்ந்து 116.26 கி.மீ. தூரம் கொண்ட அரியலூர்-நாமக்கல் ரெயில் வழித்தடத்திற்கான ஆய்வுப்பணி முடிந்தவுடன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கை தொடங்கும் என பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தருக்கு ரெயில்வே அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.