சுற்றலாவை மேம்படுத்தும் வகையில் ரெயில் பெட்டிகள்: மத்திய மந்திரி பார்வையிட்டார்

பாரம்பரிய சுற்றுலா தளங்கள் உள்ள வழித்தடங்களில் இந்த ரயில் இயக்கப்படுமென மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

Update: 2023-07-08 14:19 GMT

கோப்புப்படம் 

சென்னை,

புதிய முயற்சியாக, புதிய மின்சார ரயில் இன்ஜின் உருவாக்கப்பட்டுள்ளது என்று சென்னையில் ஆய்வு செய்த பின் ஒன்றிய அமைச்சர் பேட்டி அளித்துள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நீராவி இன்ஜின் வடிவில் தயார் செய்யப்பட்டுள்ள, புதிய மின்சார ரயில் இன்ஜினை ஆய்வு செய்த பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பாரம்பரியமும், புதிய தொழில்நுட்பமும் ஒன்று சேர புதிய முயற்சியாக, புதிய மின்சார ரயில் இன்ஜின் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் 3 மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் என்றார்.

தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் சிறந்த பாரம்பரிய சுற்றுலா தளங்கள் உள்ள வழித்தடங்களில் இந்த ரயில் இயக்கப்படும். சர்வதேச தரத்திற்கு நிகராக நாட்டில் ரயில் பாதைகள், 6 மற்றும் 8 வழிச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், வந்தேபாரத் ரயில் சிறந்த சேவையை மக்களுக்கு வழங்குகிறது. 20 ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட பல்வேறு துறைகளில் அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்தப்ட்டுள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.    

Tags:    

மேலும் செய்திகள்