ராகுல்காந்தி பிறந்த நாள் விழா
திசையன்விளையில் ராகுல்காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.;
திசையன்விளை:
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா ஆனைகுடி பஞ்சாயத்து ரோச் மாநகர், பரமேஷ்வரபுரம், ஆத்தங்கரைபள்ளிவாசல், நல்வலடி, கூத்தங்குழி, மன்னார்புரம் சந்திப்பு பகுதிகளில் நடந்தது கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தலைமை தாங்கி, கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினார். விழாவில் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் வால்டர் எட்வின், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜார்ஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
வீரவநல்லூர் பஸ்நிலையம் அருகே ராகுல்காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நகர காங்கிரஸ் தலைவர் லெட்சுமணன் தலைமை தாங்கினார். நகர பொதுசெயலாளர் முப்பிடாதி, பொருளாளர் சொரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். அம்பை தொகுதி பொறுப்பாளர் ராம்சிங் மற்றும் மாவட்ட பொது செயலாளர் சிதம்பரம் ஆகியோர் இனிப்புகள் வழங்கினர். நிகழ்ச்சியில் சேரன்மாதேவி வட்டார காங்கிரஸ் தலைவர் ராமசந்திரன், நகர தலைவர் பொன்ராஜ், நகர செயலாளர் திருநாவுக்கரசு, அம்பை வட்டார துணை தலைவர் ஜெயராமன், ஐ.என்.டி.யு.சி பொருளாளர் ஜெரால்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.