ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாய்ந்த குதிரைகள்

விஜயமங்கலத்தில் நடந்த ரேக்ளா பந்தயத்தில் குதிரைகள் சீறிப்பாய்ந்தன.

Update: 2023-07-01 21:08 GMT

பெருந்துறை

விஜயமங்கலத்தில் நடந்த ரேக்ளா பந்தயத்தில் குதிரைகள் சீறிப்பாய்ந்தன.

சீறிப்பாய்ந்த குதிரைகள்

பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலத்தில் பிரசித்தி பெற்ற விஜயபுரி அம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 29-ந் தேதி தொடங்கி 1-ந் தேதி வரை திருவிழா நடைபெற்றது. இந்த விழாவையொட்டி நேற்று குதிரைகள் பூட்டிய ரேக்ளா பந்தயம் நடந்தது.  பந்தயத்தில் பங்கேற்க வெளிமாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான குதிரைகள் கொண்டுவரப்பட்டு இருந்தன.

கொடி அசைக்கப்பட்டதும் குதிரைகள் சீறிப்பாய்ந்து சென்றன. அப்போது ரோட்டின் இருபுறமும் நின்றுகொண்டு இருந்த பொதுமக்கள் கைதட்டி உற்சாக குரல் எழுப்பினர்.

தங்ககாசு பரிசு

பந்தயத்தில் முதலில் வந்த குதிரையின் உரிமையாளருக்கு ஒரு பவுன் தங்க காசும், 2-வதாக வந்த குதிரையின் உரிமையாளருக்கு 6 கிராம் தங்க காசும், 3-வதாக வந்த குதிரையின் உரிமையாளருக்கு 4 கிராம் தங்க காசும் பரிசாக வழங்கப்பட்டது. இது தவிர சிறப்பாக ஓடிய குதிரைகளின் உரிமையாளர்களுக்கு தலா ஒரு கிராம் தங்க காசு பரிசாக வழங்கப்பட்டது.

பெருந்துறை பகுதியில் இதுவரை ரேக்ளா பந்தயம் நடைபெற்றதில்லை. அதனால் நேற்று நடந்த பந்தயத்தை காண ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காளை மாடுகள் பூட்டப்பட்ட ரேக்ளா பந்தயம் நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்