சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்

மேலூர் அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

Update: 2023-09-24 19:52 GMT

மேலூர், 

மேலூர் அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

மாட்டுவண்டி பந்தயம்

மேலூர் அருகே பெரிய சூரக்குண்டு ஸ்ரீசின்னடக்கி அம்மன், ஆண்டி அரசு மகன், பெரியடைக்கி அம்மன் புரட்டாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் பெரியசூரக்குண்டு- அழகர்கோவில் சாலையில் நடைபெற்றது. இதில் 12 வண்டியில் ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. முதல் பரிசு இலங்கிப்பட்டி ஆண்டி அர்ச்சுனன் அம்பலம், 2-ம் பரிசு சூரக்குண்டு அருணாச்சலம் அம்பலம் அமர்நாத் ஏ.எஸ். பில்டர்ஸ், 3-ம் பரிசு சின்ன மாங்குளம் அழகு, 4-ம் பரிசு புதுப்பட்டி சின்னச்சாமி அம்பலம் நினைவாக சிவபாலன், அப்பன் திருப்பதி ராகுல் ஆகியோரது மாடுகள் வெற்றி பெற்றன.

சின்ன மாட்டு வண்டி போட்டியில் 26 ஜோடிகள் கலந்து கொண்டன. இரண்டு சுற்று பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. முதல் சுற்றில் முதல்பரிசு அனுமந்தம்பட்டி மன்னர் மருது பாண்டியர் நினைவாக பிரவீன் குமார், 2-ம் பரிசு சாத்தமங்கலம் சர்ஜித், கிடாரிப்பட்டி பாண்டியராஜன், 3-ம் பரிசு புதுப்பட்டி சின்னச்சாமி அம்பலம் நினைவாக சிவபாலன், அப்பன் திருப்பதி ராகுல், 4-ம் பரிசு கள்ளந்திரி ஐந்து கோவில் சாமி துணை, சூரக்குண்டு அழகு பாண்டி ஆகியோரது மாடுகள் வெற்றிபெற்றன.

பரிசுகள்

2-வது சுற்றில் முதல் பரிசு அவனியாபுரம் முருகன் நகைக்கடை சுகன்யா ஸ்ரீ, 2-ம் பரிசு பாலூத்து சின்னச்சாமி, 3-ம் பரிசு அய்யம்பாளையம் வாடிப்பட்டி தங்கராஜன், 4-ம் பரிசு அய்யம்பாளையம் காமாட்சி அம்மன் துணை ஆகியோரது மாடுகள் வெற்றி பெற்றன. மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசு தொகையும், வெற்றிக்கோப்பைகளும் வழங்கப்பட்டன. இலக்கை நோக்கி மாட்டு வண்டிகள் சீறி பாய்ந்ததை ரோட்டின் இருபுறமும் நின்றிருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்