தூத்துக்குடி மாவட்டத்தில் புதன்கிழமை ரேபிஸ் தடுப்பூசி முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் புதன்கிழமை ரேபிஸ் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.;
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி கால்நடை பன்முக மருத்துவமனை உள்பட தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை ஆஸ்பத்திரிகள் மற்றும் கால்நடை மருந்தகங்களில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை செல்ல பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது.
பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் செல்ல பிராணிகளை ரேபிஸ் நோய் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த தகவலை, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.