முயல் வேட்டையாடியவர் கைது
களக்காடு அருகே முயல் வேட்டையாடியவர் கைது செய்யப்பட்டார்.;
களக்காடு:
களக்காடு அருகே உள்ள கீழதுவரைகுளத்தை சேர்ந்தவர் சாமுவேல் (வயது 45). இவர் அப்பகுதியில் சுற்றி திரிந்த முயலை வேட்டையாடி, கறி சமைத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தகவல் அறிந்த களக்காடு வனத்துறையினர் அவரை கைது செய்தனர். விசாரணைக்கு பின் அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.