வினாடி-வினா, ஓவிய போட்டி

சர்வதேச நிலா தினத்தை முன்னிட்டு நெல்லையில் பள்ளி மாணவர்களுக்கு வினாடி-வினா, ஓவிய போட்டி

Update: 2022-07-08 21:23 GMT

நெல்லை மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) உந்தும வளாகம் சார்பில், வருகிற 20-ந்தேதி (புதன்கிழமை) சர்வதேச நிலா தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான வினாடி-வினா மற்றும் ஓவிய போட்டி வருகிற 20-ந்தேதி காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இதில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடத்தின் மூலமாக பங்கேற்கலாம்.

6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 'நமது விண்வெளி அருகில் நிலா' என்ற தலைப்பில் வினாடி-வினா மற்றும் ஓவிய போட்டி நடத்தப்படுகிறது. 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 'நமது விண்வெளி அருகில் நிலா' மற்றும் 'சர்வதேச நிலா ஆராய்ச்சி பயணங்கள்' ஆகிய தலைப்புகளில் வினாடி-வினா போட்டி நடத்தப்படுகிறது.

ஓவிய போட்டியில் பங்கேற்கிறவர்களுக்கு பேப்பர், பென்சில் வழங்கப்படும். வண்ண பென்சில்கள் போன்றவற்றை மாணவர்களே கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் 2 அணிகள் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படும். போட்டியில் பங்கேற்க விரும்புகிறவர்கள் 'நிர்வாக அலுவலர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம், மகேந்திரகிரி- 627133, நெல்லை மாவட்டம்' என்ற முகவரிக்கு வருகிற 15-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு srs@iprc.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 04637-281210/ 1211 ஆகிய தொலைபேசி எண்களிலோ, 9443271210 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை மகேந்திரகிரி இஸ்ரோ நிறுவன நிர்வாக அலுவலர் சுப்பிரமணிய பிள்ளை தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்