வேப்பனப்பள்ளி அருகேமேய்ச்சலுக்கு சென்ற ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு

Update: 2023-08-17 19:30 GMT

வேப்பனப்பள்ளி:

வேப்பனப்பள்ளி அருகே உள்ள நந்தகுண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் யசோதா பாய். இவர் நேற்று மாலை தனக்கு சொந்தமான 5 ஆடுகளை அங்குள்ள விவசாய நிலத்தில் மேய்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஆடுகள் சத்தம் போட்டதை அறிந்த யசோதா அங்குள்ள முட்புதருக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு சுமார் 12 நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று ஆட்டை விழுங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அங்கு செல்வதற்குள் மலைப்பாம்பு ஆட்டை முழுவதும் விழுங்கியது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வருவதற்குள் மலைப்பாம்பு அங்கிருந்து சென்றுவிட்டது.

இதற்கிடையே மலைப்பாம்பு விழுங்கிய ஆடு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் 2 குட்டிகளை ஈன்றது. தற்போது தாய் இல்லாததால் 2 குட்டிகளும் குடிப்பதற்கு பால் இன்றி கத்தி கொண்டிருந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்