ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் புழல் சிறை கைதி சாவு
ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் புழல் சிறை கைதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.;
வேலூர் அடுத்த காட்பாடியை சேர்ந்தவர் விஜயன் (வயது 50). இவர், வேலூர் மத்திய சிறையில் தண்டனை கைதியாக இருந்து வந்தார். இவருக்கு சர்க்கரை நோய் இருந்ததால் அங்கு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக விஜயன், சென்னை புழல் தண்டனை சிறைக்கு மாற்றப்பட்டார்.
கடந்த 11-ந்தேதி சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 15-ந் தேதி அவருக்கு ஒரு கால் அகற்றப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி கைதி விஜயன், நேற்று உயிரிழந்தார். இது குறித்து சிறை அலுவலர் இளங்கோ அளித்த புகாரின்பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.