அரசு பள்ளியில் தூய்மை உறுதிமொழி ஏற்பு

செங்கோட்டை அரசு பள்ளியில் தூய்மை உறுதிமொழி ஏற்கப்பட்டது.;

Update: 2023-10-02 20:12 GMT

செங்கோட்டை:

செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த கல்வித்துறையின் அறிவுறுத்தலின் படி காந்தி ஜெயந்தி தினத்தில் காந்தியின் தூய்மை இந்தியா கனவை நினைவாக்கும் விதமாக உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்ததது. தலைமைஆசிரியர் சுந்தரகுமார் தலைமை தாங்கினார்.உதவித் தலைமை ஆசிரியர் ஜோதிலட்சுமி முன்னிலை வகித்தார்.வளாகத் தூய்மை, கட்டிடங்கள் பராமரித்தல், மரக்கன்று நடுதல் முதலான 10 வகையான தூய்மைப் பணிகள் நடைபெற்றன.காந்தியின் கனவான தூய்மை இந்தியா திட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக உடல் தூய்மை, வீடு, கழிவறை, பூங்கா, சுற்றுப்புறம் ஆகிய இடங்களில் தூய்மையைப் பேணிக் காப்பதற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் திரளாகக் கலந்து கொண்டனர். நிறைவாக பொருளியல் முதுகலை ஆசிரியர் குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்