திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் தூய்மை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் பாலு, பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்துக்கொள்வது குறித்து விளக்கம் அளித்தார். இதையடுத்து ஆசிரியர் இளங்கோவன் உறுதிமொழியை வாசிக்க அனைத்து மாணவ, மாணவிகளும் உறுதிமொழி ஏற்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் முகுந்தன், சந்திரசேகரன், கவியரசன், ரகு, பாலசுப்பிரமணியன், வடிவேல் ஆகியோர் செய்திருந்தனர்.