படிப்பாதை விநாயகர் மண்டபத்தில் தூய்மை பணி
பழனி முருகன் கோவிலில் படிப்பாதை விநாயகர் மண்டபத்தில் தூய்மை பணி நடந்தது.;
பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மண்டபங்கள் புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. அதன்படி தற்போது படிப்பாதையில் உள்ள விநாயகர் மண்டபத்தில் தூய்மை பணி, சிமெண்டு பூச்சு பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்த வழியாக பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதற்கு பதிலாக நுழைவு பகுதியை கடந்ததும் வெளியே வரும் பாதையில் பக்தர்கள் சென்று வர அனுமதிக்கப்படுகின்றனர்.