காட்டழகர் கோவிலில் புரட்டாசி திருவிழா
காட்டழகர் கோவிலில் புரட்டாசி திருவிழா நடைபெற்றது.;
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு மலைப்பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டழகர் என அழைக்கப்படும் சுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதேபோல நேற்று நடைபெற்ற புரட்டாசி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.