1-வது மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

1-வது மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் மனு;

Update: 2022-09-12 13:54 GMT

அனுப்பர்பாளையம்

திருப்பூர் மாநகராட்சி 14-வது வார்டில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி,  பொதுமக்கள் நேற்று அனுப்பர்பாளையத்தில் உள்ள 1-வது மண்டல அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

அனுப்பர்பாளையம் தொடக்கப்பள்ளி வீதி மற்றும் வார்டுக்குட்பட்ட பகுதிகளில் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழைக்காலங்களில் சாலையில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் விபத்துகள் ஏற்படுவதுடன், சுகாதா சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. சித்தி விநாயகர் கோவில் பகுதியில் மின் கம்பங்களும், இந்திரா வீதியில் சாக்கடை கால்வாய்களும், வல்லபாய் படேல் வீதியில் குடிநீர் குழாய்களும் சேதமடைந்தும் காணப்படுகின்றன. நேரு வீதியில் தெருவிளக்கு எரியாமல் உள்ளது. பெரியார்காலனி உள்பட வார்டுக்குட்பட்ட அனைத்து வீதிகளிலும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தெருநாய் கூட்டமாக வலம் வருகிறது. 5-க்கும் மேற்பட்டோரை தெருநாய்கள் கடித்துள்ளது. எனவே வார்டுக்குட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.


Tags:    

மேலும் செய்திகள்