புஞ்சைபுளியம்பட்டி ஆதிபராசக்தி கோவில் சாலையை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
புஞ்சைபுளியம்பட்டி ஆதிபராசக்தி கோவில் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.;
புஞ்சைபுளியம்பட்டி
சத்தியமங்கலம்-கோவை தேசிய நெடுஞ்சாலை மற்றும் பவானிசாகர் ரோட்டை இணைக்கும் இணைப்பு சாலையாக புஞ்சைபுளியம்பட்டி ஆதிபராசக்தி கோவில் சாலை உள்ளது. இது நீண்ட காலமாக பழுதுடைந்து குண்டும்-குழியுமாக காணப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் பெய்து வரும் மழையால் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த ரோட்டில் 3 தனியார் மருத்துவமனைகள் மற்றும் பி.எஸ்.என்.எல் அலுவலகம் உள்ளது. இதனால் எப்போதும் போக்குவரத்து இருந்துக்கொண்டே இருக்கும். எனவே இரு முக்கிய சாலைகளை இணைக்கும் இணைப்பு சாலையாக உள்ள ஆதிபராசக்தி கோவில் சாலையை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.