கடலூர் அருகே புனிதவேல் திருமுருகன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

கடலூர் அருகே புனிதவேல் திருமுருகன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2023-06-25 18:45 GMT

கடலூர் அருகே திருச்சோபுரம் மதுரா பூண்டியாங்குப்பத்தில் வள்ளி தேவசேனா சமேத புனிதவேல் திருமுருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். அதன்படி இக்கோவிலில் திருப்பணி வேலைகள் முடிந்து நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, மிருத்சங்கிரகணம், அங்குரார்ப்பணம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது.

கும்பாபிஷேகம்

நேற்று காலை 7 மணி அளவில் கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, பிம்பசுத்தி, நாடி சந்தானம், 2-ம் கால யாக பூஜைகள், ஹோமங்கள் நடந்தது. தொடர்ந்து யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் அடங்கிய கலசத்தை உற்சவ ஆச்சாரியார் ஊர்வலமாக கொண்டு வந்தார். அவருடன் ஊர் முக்கியஸ்தர்களும் ஊர்வலமாக வந்தனர்.

அதன்பிறகு கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து புனித நீர் கோவில் முன்பு திரண்டு நின்ற பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இரவு வள்ளி, தேவசேனா சமேத புனிதவேல் திருமுருகனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. அதையடுத்து சாமி வீதிஉலா நடைபெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்