பருப்பு, பாமாயிலை ஜூலையில் பெறாதவர்கள் ஆகஸ்ட்டில் பெறலாம்: அரசு

துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஜூலை மாதத்தில் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-08-01 16:19 GMT

சென்னை,

தமிழ்நாடு நுகர்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

"தமிழ்நாடு அரசு சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30க்கும் ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25க்கும் மானிய விலையில் வழங்கி வருகிறது.

ஜுன் 2024-ம் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற இயலாத குடும்ப அட்டைதாரர்கள், ஜுன் 2024-ம் மாத துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை ஜூலை 2024-ம் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என சட்டமன்றத்தில் மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஜுன் 2024-ம் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற முடியாதவர்கள் வசதிக்காக ஜுலை 2024-ம் மாதத்தில் நியாய விலைக் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக் கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டது.

இருப்பினும், ஜுலை 2024-ம் மாதத்தில் சிறப்பு பொது விநியோகத்திட்டப் பொருட்கள் முழுமையாக நகர்வு செய்யப்படாத காரணத்தினால் குடும்ப அட்டைதாரர்களால் ஜூலை 2024-ம் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் முழுமையாக பெற இயலவில்லை.

ஆதலால், குடும்ப அட்டைதாரர்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டு ஜுலை 2024-ம் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட் பெற இயலாத அட்டைதாரர்கள் அவர்களுக்கான ஜூலை 2024-ம் மாத துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை ஆகஸ்ட் 2024-ம் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்