ரூ.42.40 லட்சத்தில் புதிய தேர் செய்ய பூஜை
சிக்கல் சிங்காரவேலவர் கோவிலுக்கு ரூ.42.40 லட்சத்தில் புதிய தேர் செய்ய பூஜை நடந்தது.;
சிக்கல்:
நாகை அருகே சிக்கல் நவநீதேஸ்வரர் கோவில் உள்ளது .இந்த கோவிலில் உள்ள வேல்நெடுங்கன்னி அம்மனிடம் இருந்து சிங்காரவேலவர்(முருகன்) சக்திவேல் வாங்கி திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக கந்தபுராணம் கூறுகிறது. அம்மனிடம் இருந்து வேல் வாங்கும் போது சிங்காரவேலவர் முகத்தில் வியர்வை சிந்தும் அற்புதக்காட்சி ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழாவின் போது நடைபெறும். இக்கோவிலில் நவநீதேஸ்வரர் மற்றும் சிங்காரவேலவருக்கு தனித்தனியே தேர்உள்ளது. இதில் நவநீதேஸ்வரர் தேர் பழுதடைந்தது காரணமாக கடந்த 2011-ம் ஆண்டு முதல் தேர் நிறுத்தப்பட்டது. ஆண்டுதோறும் சிங்காரவேலவர் தேருக்கு மட்டுமே தேரோட்டம் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.42.40 லட்சம் மதிப்பில் புதிய தேர் செய்ய டெண்டர் விடப்பட்டது. இதையடுத்து பழைய தேரை எடுத்து விட்டு அதற்கு பதிலாக புதிய தேர் செய்யும் பணி தொடங்குவதற்கான பூஜை நடந்தது. இதில்கோவில் நிர்வாகத்தினர், பொதுமக்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.