புதுக்கோட்டையில்புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டையில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது.

Update: 2023-02-06 18:45 GMT

பள்ளிக் கல்வித்துறை சார்பில் தூத்துக்குடி ஊரக வட்டாரத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளில் மொத்தம் 30 மையங்களில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் குறித்து பெற்றோர், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி புதுக்கோட்டையில் நடந்தது. பேரணிக்கு தூத்துக்குடி ஊரக வட்டார கல்வி அலுவலர்கள் ஜெயபாலன், தேவி ஆகியோர் தலைமை தாங்கினர். ஊரக வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சார்லஸ் முன்னிலை வகித்தார். பேரணி புதுக்கோட்டை ராஜீவ் நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இருந்து தொடங்கியது. பேரணி புதுக்கோட்டை பஜார், நெல்லை மெயின் ரோடு உள்பட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பள்ளியில் முடிவடைந்தது. இதில், ஆசிரியர் பயிற்றுநர் ராமநாதன், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்