புதுக்கோட்டையில் வீடு புகுந்து நகை திருடிய வாலிபர் கைது
புதுக்கோட்டையில் வீடு புகுந்து நகை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை பாண்டியாபுரத்தை சேர்ந்தவர் பாபுராஜ் (வயது 32). இவர் எலக்ட்ரிக்கல் கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 08.06.23 அன்று வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்று இருந்தாராம். அப்போது மர்ம ஆசாமி வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 2 பவுன் தங்கசங்கிலியை திருடி சென்றுவிட்டாராம்.
இது குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஒரு வழக்கில் பிடிபட்ட ஏரல் சொக்கப்பழங்கரையை சேர்ந்த ஜடேஜா (23) என்பவர், பாபுராஜ் வீட்டிலும் திருடி இருப்பது விசாரணையில் தெரியவந்தது. அதன்பேரில் இந்த வழக்கிலும் ஜடேஜாவை போலீசார் கைது செய்தனர்.