முன்மாதிரி ரெயில் நிலைய திட்டத்தில் புதுக்கோட்டை
முன்மாதிரி ரெயில் நிலையமாக புதுக்கோட்டை ரெயில் நிலையத்தை மாற்ற ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மதுரை கோட்ட ரெயில்வேயில் புதுக்கோட்டை ரெயில் நிலையம் முக்கியமானதாக அமைந்துள்ளது. புதுக்கோட்டை வழியாக தினமும் 20-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்தநிலையில் மத்திய அரசின் ரெயில் நிலையங்களை முன்மாதிரி ரெயில் நிலையமாக மாற்றும் ஆதார்ஷ் எனும் திட்டத்தில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தை மாற்ற ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் உள்பட நவீன மயமாக்கல், பயணிகளுக்கான சேவைகள் அதிகப்படுத்துதல் உள்ளிட்டவை இடம்பெறும். இதன் மூலம் முன்மாதிரி ரெயில் நிலையமாக புதுக்கோட்டை மாற உள்ளது.