என்ஜினீயரிங் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்ச்சி சதவீதம் வெளியீடு

மாணவர்களின் கலந்தாய்வுக்கு பயன்பெறும் வகையில் என்ஜினீயரிங் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்ச்சி சதவீதம் வெளியிடப்பட்டுள்ளது.;

Update:2022-08-17 06:01 IST
என்ஜினீயரிங் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்ச்சி சதவீதம் வெளியீடு

சென்னை,

என்ஜினீயரிங் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் வசதிக்காக சிறப்பான கல்வியை வெளிப்படுத்தி வரும் கல்லூரிகள் எவை? அந்த கல்லூரிகளின் தேர்ச்சி சதவீதம் எப்படி இருக்கிறது? கடந்த ஆண்டு அந்த கல்லூரியின் கட்-ஆப் மதிப்பெண் எவ்வளவு இருந்தது? என்பது போன்ற விவரங்களை https://www.tneaonline.org/என்ற தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் கடந்த ஆண்டு ஏப்ரல்-மே மற்றும் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் அண்ணா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் மற்றும் கல்லூரியின் தேர்ச்சி சதவீதம் எவ்வளவு? என்பது போன்ற விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்