விருதுநகர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் மேகநாத ரெட்டி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.;

Update: 2023-01-05 18:38 GMT


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் மேகநாத ரெட்டி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

வெளியீடு

விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் மேகநாத ரெட்டி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிகள் முன்னிலையில் வெளியிட்டார். 1.1.2023-ஐ தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற்றது. இறுதி வாக்காளர் பட்டியலின்படி விருதுநகர் மாவட்டத்தில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 15 லட்சத்து 83 ஆயிரத்து 199. இதில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 72 ஆயிரத்து 533. பெண் வாக்காளர்கள் 8 லட்சத்து 10 ஆயிரத்து 433. இதரர் 233.

கடந்த 8.11.2022 முதல் 8.12.2022 வரை நடைபெற்ற தொடர் திருத்தத்தில் புதிதாக 25 ஆயிரத்து 577 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இடம் பெயர்ந்த, இறந்த வாக்காளர்கள் மற்றும் இரட்டை பதிவுகள் ஆக மொத்தம் 31 ஆயிரத்து 122 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 8.11.2022 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை விட தற்போது 5 ஆயிரத்து 545 வாக்காளர்கள் குறைவாக இடம் பெற்றுள்ளனர்.

சட்டமன்ற தொகுதி வாரியாக விவரம்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் தொகுதிவாரியான வாக்காளர்கள் விவரம் வருமாறு:

ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 23 பேரும், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 894 பேரும், இதரர் 33 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 24 ஆயிரத்து 950 வாக்காளர்கள் உள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 274 பேரும், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 237 பேரும் இதரர் 34 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 34 ஆயிரத்து 545 பேர் உள்ளனர்.

சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 146 பேரும், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 5 76 பேரும் இதரர் 63 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 36 ஆயிரத்து 785 பேர் உள்ளனர்.

சிவகாசி சட்டமன்ற தொகுதி

சிவகாசி சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 829 பேரும், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 460 பேரும், இதரர் 26 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 41 ஆயிரத்து 315 பேர் உள்ளனர்.

விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 423 பேரும், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 480 பேரும், இதரர் 47 பேரும் ஆக மொத்தம் 2 லட்சத்து 15 ஆயிரத்து 950 பேர் உள்ளனர்.

அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 801 பேரும் பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 12ஆயிரத்து 285 பேரும், இதரர் 19 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 18 ஆயிரத்து 105 பேர் உள்ளனர்.

திருச்சுழி தொகுதியில் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 4ஆயிரத்து 37 பேரும், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 511 பேரும் இதரர் 11 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 11 ஆயிரத்து 559 பேர் உள்ளனர்.

திருத்தம்

18 வயதினை பூர்த்தி செய்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர், வாக்காளர் பட்டியலில் திருத்தம் மற்றும் நீக்கம் செய்ய விரும்பும் அனைவரும் 5-ம் தேதிக்குப் பின் தெரிவித்து அதன்பின் நடைபெற உள்ள வாக்காளர் பட்டியல் தொடர் மேம்பாட்டு காலத்தில் அதற்கான சேவை மூலமாக இணைய வழியிலும் உரிய படிவத்தினை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர் மற்றும் வட்ட கோட்ட நகராட்சி மற்றும் கலெக்டர் அலுவலகங்களிலும் படிவத்தை சமர்ப்பிக்கலாம்.

வாக்காளர் சேவைகளை பெறுவதற்கான இணையதள முகவரி விவரங்களை வாட்ஸ் அப் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்