நிலையூர் கால்வாய்க்கு தண்ணீர் திறப்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.விடம் ஆலோசனை

நிலையூர் கால்வாய்க்கு தண்ணீர் திறப்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.விடம் ஆலோசனை நடத்தினார்

Update: 2022-10-12 21:03 GMT


திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பிரச்சினைகள் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டரிடம் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கோரிக்கை மனு கொடுத்தார். அதில் ஒன்றான நிலையூர் கால்வாயை பாசன கால்வாயாக மாற்றி, பாசன கால்வாயில் மற்ற பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடுவதைப் போல திருப்பரங்குன்றம் பகுதிக்கும் நிரந்தரமாக வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இருந்தார். அதன் அடிப்படையில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அன்பரசன், உதவி பொறியாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் நேற்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.ைவ சட்டமன்ற அலுவலகத்தில் சந்தித்தனர்.

அப்போது அவர்களிடம் இப்பகுதி விவசாயிகள் கால்வாய் நீரை நம்பியே விவசாயம் செய்கின்றனர். எனவே இப்பகுதியில் பாசன கால்வாயாக நிலையூர் கால்வாயை மாற்ற வேண்டும். மேலும் தென்பழஞ்சி, வேடர் புளியங்குளம், சாக்கிலிப்பட்டி உள்ளிட்ட பகுதி கண்மாய்களுக்கு வைகை நீரை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விடுத்தார். இது தொடர்பாக விரைவில் திட்ட அறிக்கை தயார் செய்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்து சென்றனர்.

இதேபோல கலெக்டரிடம் திருநகர் அண்ணா பூங்கா மைதானத்தை மேம்படுத்தும் வகையில் சிந்தடிக் ஆக்கி மைதானம் அமைக்க கோரிக்கை விடுத்தார். கோரிக்கையின் அடிப்படையில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.,வை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், மாவட்ட துணை செயலாளர் ஓ.எம்.கே. சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்