15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கும் பொது போக்குவரத்துக்கு சொந்தமான வாகனங்களின் பதிவுகள் நாளை முதல் ரத்து
நாடு முழுவதும் 15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கும் பொது போக்குவரத்துக்கு சொந்தமான வாகனங்களின் பதிவுகள் ரத்து செய்யப்படவுள்ளன.;
புதுடெல்லி,
பழைய வாகனங்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் காற்று மாசு ஆகியவற்றை கட்டுப்படுத்தும் வகையில், பழைய வாகனங்களின் பதிவுகளை ரத்து செய்யும் 'ஸ்கிராப்பிங்' திட்டத்தை மத்திய அரசு திட்டத்தை அமல்படுத்த உள்ளது.
அதன்படி நாளை முதல், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குச் சொந்தமான அனைத்து வாகனங்கள், போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்குச் சொந்தமான பேருந்துகள் உட்பட, 15 ஆண்டுகளுக்கும் மேலான வாகன பதிவுகள் ரத்து ரத்து செய்யப்பட உள்ளன.
இதில் ராணுவம் மற்றும் காவல் துறை உள்ளிட்ட துறையினருக்கு மட்டுமே இந்த விதி பொருந்தாது என்று தெரிவிக்கபட்டுள்ளது. பழைய வாகன பதிவுகளை ரத்து செய்து புதிய வாகனங்களை வாங்கும் பட்சத்தில் சாலை வரியில் 25 சதவீதம் வரை வரி தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.