தை அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம்

கரூர் மாவட்டத்தில் தை அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.;

Update: 2023-01-21 18:30 GMT

தர்ப்பணம்

மறைந்த முன்னோர்களுக்கு அமாவாசை தினத்தில் திதி கொடுக்கப்படுவது உண்டு. இதில் தமிழ் மாதங்களில் தை, ஆடி அமாவாசை தினத்திலும், புரட்டாசி மாத மகாளய அமாவாசை தினத்திலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அன்றைய தினங்களில் மறைந்த முன்னோர்களை நினைத்து திதி கொடுத்து வழிபாடு நடத்துவது ஐதீகமாக உள்ளது. மேலும் அவர்களது ஆசியும் கிடைக்கும் என்பது ஐதீகம். அந்த வகையில் தை அமாவாசையையொட்டி கரூர் மாவட்டத்தில் நேற்று நீர்நிலைகளில் பக்தர்கள் புனித நீராடி, மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

நெரூர், வாங்கல் உள்ளிட்ட காவிரி ஆற்றங்கரைகளில் தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் ஏராளமானோர் வந்தனர். புரோகிதர்களும் பொதுமக்களை அமர வைத்து அவர்களது முன்னோர்கள் பெயர், நட்சத்திரம் கூறி வேத மந்திரங்களை ஓதி பூஜை செய்தனர். தொடர்ந்து அரிசி மாவில் செய்யப்பட்ட பிண்டத்தினை காவிரி ஆற்றில் பொதுமக்கள் கரைத்து வழிபட்டனர்.

குளித்தலை

தை அமாவாசையான நேற்று காலை காசிக்கு நிகராக கருதப்படும் குளித்தலை கடம்பவனேசுவரர் கோவில் எதிரே உள்ள கடம்பந்துறை காவிரி நதிக்கரைக்கு குளித்தலை மற்றும் இதை சுற்றியுள்ள பல்வேறு கிராமப் பகுதிகளைச் சேர்ந்த திரளானோர் வந்திருந்தனர். அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடிய பின்னர், ஆற்றங்கரையில் ஆங்காங்கே அமர்ந்திருந்த அர்ச்சகர்களிடம் சென்று இறந்த தங்களது தாய், தந்தை, முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டியும், முன்னோர்கள். தங்களுக்கு எல்லா நன்மைகளையும் செய்யவேண்டுமென வேண்டியும் பிண்டங்கள் வைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

பின்னர் தர்ப்பணம் செய்த பொருட்களை காவிரி ஆற்றில்விட்டு வழிபட்டனர். பசு மாடுகளுக்கு அகத்திக்கீரை, பச்சரிசி, வெள்ளம் ஆகியவற்றை வழங்கினர். இதையடுத்து கடம்பவனேசுவரர் கோவிலுக்கு சென்று சுவாமியை வழிபட்டு சென்றனர்.

ெநாய்யல்

நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, திருக்காடுதுறை, தவிட்டுப்பாளையம், நன்செய் புகழூர் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் ேநற்று காலை தங்களது குடும்பத்துடன் காவிரி ஆற்றுக்கு வந்தனா். பின்னா் காவிரி கரையோரத்தில் மணல் பரப்பில் வாைழ இலையில் பச்சரிசி மாவு, எள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வைத்து தங்கள் முன்ேனார்களுக்கு தர்ப்பணம் ெகாடுத்தனா். ெதாடர்ந்து அந்த ெபாருட்களை காவிரி ஆற்றில் விட்டு அருகில் இருந்த கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்