புத்தூரில் மின்சாரம் இ்ல்லாததால் பொதுமக்கள் அவதி

புத்தூரில் மின்சாரம் இ்ல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

Update: 2022-10-15 18:47 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே உள்ள புத்தூர் ஊராட்சியில் 3-வது வார்டில் சவுமியா நகர் உள்ளது. கடந்த மாதம் புத்தூரில் இருந்து இனாம் கோவில்பட்டி செல்லும் சாலையில் நடைபெற்ற பாலப்பணிகளின் போது, சாலையோரம் இருந்த மின் கம்பம் சாய்ந்தது.

இதனால் புத்தூரில் உள்ள மெயின்மின்மாற்றியில் இருந்து சவுமியா நகருக்கு செல்லும் மின் வயர்கள் கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக துண்டிக்கப்பட்டது. எனவே இப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் குடியிருப்புகளுக்கு கடந்த 3 தினங்களாக மின்வினிேயாகம் இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். ஆதலால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பிரச்சினையில் உடன் தலையிட்டு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்