நெல்லையில் கோவில் வளாகத்தில் பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம்

நெல்லையில் கோவில் வளாகத்தில் பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2023-06-08 20:19 GMT

நெல்லை சந்திப்பு உடையார்பட்டியில் ஒரு பிரிவினருக்கு சொந்தமான கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதற்கிடையே அப்பகுதியில் உள்ள மற்றொரு பிரிவினரின் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) திருவிழா நடக்கிறது. எனவே அவர்கள் அன்னதானம் நடத்துவதற்கு மற்றொரு பிரிவினரின் கோவில் அருகில் இடம் ஒதுக்கி தருமாறு அனுமதி கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு அந்த பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து நேற்று இரவில் தங்களது கோவில் வளாகத்தில் திரண்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களது மாடுகளையும் கோவில் அருகில் அழைத்து வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியதை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நெல்லை சந்திப்பு உதவி போலீஸ் கமிஷனர் ராஜேஸ்வரன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்