விக்கிரவாண்டி அருகே டவுன் பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

விக்கிரவாண்டி அருகே டவுன் பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2022-08-17 14:41 GMT

விக்கிரவாண்டி, 

பெரியதச்சூரில் இருந்து விழுப்புரத்திற்கு அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. பஸ்சில் ஏராளமான பயணிகள் நின்று கொண்டும், படிக்கட்டில் தொங்கியவாறும் பயணம் செய்தனர். வி.சாலை பேருந்து நிறுத்தம் வந்ததும், டிரைவர் பஸ்சை நிறுத்தினார். அப்போது அங்கு நின்ற பொதுமக்கள், மாணவர்கள் பாதி அளவு மட்டுமே பஸ்சில் ஏற முடிந்தது. மீதி பேர் ஏற முடியாத நிலையில் இருந்ததால் அரசு டவுன் பஸ் டிரைவர் பின்னால் வரும் பஸ்சில் ஏறி வாருங்கள் என கூறிவிட்டு பஸ்சை எடுக்க முயன்றதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டிரைவர் பயணிகளிடம் கூறுகையில், நான் அனைத்து பேருந்து நிறுத்தத்திலும் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றிக்கொண்டு தான் வருகிறேன், இதனால் தான், பஸ்சில் அதிக கூட்டம் உள்ளது. எனவே பின்னால் வரும் டவுன் பஸ்சில் ஏறி வாருங்கள் கூறினார். இதையேற்ற பொதுமக்கள் பஸ்சை விடுவித்து போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து அந்த பஸ் அங்கிருந்து புறப்பட்டு விழுப்புரம் சென்றது. இருப்பினும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்