ஏரியூர் அருகே சுடுகாட்டில் சவக்குழிகள் மீது சாலை அமைத்ததால் பொதுமக்கள் போராட்டம்
ஏரியூர்
ஏரியூர் அருகே உள்ள ராமகொண்டஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட புதுச்சாம்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட வசித்து வருகின்றனர். இந்த ஊருக்காக ஒதுக்கப்பட்டுள்ள சுடுகாட்டிற்கு, சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது சாலையோரம் இருந்த சுடுகாட்டில், சவக்குழிகளை தோண்டி அதில் இருந்த எழும்புகூடுகளை மேலே போட்டதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் தங்களது பெற்றோர்களின் சவக்குழிகள், காணாமல் போனதாக கூறி கதறி அழுதனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.