பகுதிநேர ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

பகுதிநேர ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

Update: 2023-06-23 18:45 GMT

திருவெண்ணெய்நல்லூர் தாலுகா காந்தலவாடி காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எங்கள் கிராமத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இங்கு 351 குடும்ப அட்டைதாரர்கள், அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆவர். இவர்கள் கடும் வெயிலிலும் மற்றும் மழையிலும் நடந்து சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கி வர மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே எங்கள் பகுதிக்கு தனியாக பகுதிநேர ரேஷன் கடை அமைத்துத்தர வேண்டுமென பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். இதற்காக கோப்புகள் தயாரிக்கப்பட்டு இணைப்பதிவாளரிடம் கொடுத்து 3 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை எந்தவித முன்னேற்றமும் இல்லை. ஆகவே மாவட்ட கலெக்டர் இதில் உடனடியாக தலையிட்டு, எங்கள் பகுதியில் பகுதிநேர ரேஷன் கடை அமைத்துத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர் அலுவலக அதிகாரிகள், இதுகுறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்