நாகர்கோவில் மேலகலுங்கடியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு

நாகர்கோவில் மேலகலுங்கடியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Update: 2022-08-24 21:07 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவில் மேலகலுங்கடியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தமிழகத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், இத்தகைய நடவடிக்கையில் எந்த பாரபட்சமும் காட்டக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை ஐகோர்ட்டு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின்படி குமரி மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். நாகர்கோவில் புத்தேரி குளத்தின் கரையில் மேல கலுங்கடி பகுதியில் 25-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவர்கள் கட்டிய வீடுகள் அனைத்தும் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு 3 நோட்டீஸ் அனுப்பினர். அதில், வீடுகளை காலிசெய்யும் படி தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் நேற்று காலை அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் குடியிருந்து வருவதாகவும், திடீரென காலி செய்ய கூறினால் நாங்கள் எங்கு செல்வோம் என தெரிவித்தனர்.

மேலும் மாற்று இடம் தராமல் வீடுகளை அகற்றக்கூடாது என்றனர். இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த வடசேரி போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்