பொதுமக்களுக்கு இடையூறு; வாலிபர் கைது

போடியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-06-27 18:45 GMT

போடி டி.வி.கே.கே நகரை சேர்ந்தவர் முத்துகாளீஸ்வரன் (வயது 21). நேற்று இவர், போடி அரசு மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த போடி நகர் போலீசார் சம்பவ இடத்தி்ற்கு வந்து எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் அதை கேட்காமல் அவர் மேலும் சத்தம் போட்டதாக தெரிகிறது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்