கோவில்பட்டியில்வியாழக்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவில்பட்டியில்வியாழக்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.;

Update: 2022-10-18 18:45 GMT

கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்டம் உருவான நாள் கொண்டாடப் படுவதை முன்னிட்டு, நாளை (வியாழக்கிழமை)

கோவில்பட்டியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் காலை 10 மணி முதல் 11 மணி வரை பொதுமக்களிடம் குறைகள் கேட்டு மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடக்கிறது. இதேபோன்று காலை 11 மணி முதல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டமும் நடைபெற உள்ளது.

கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், கயத்தாறு, ஓட்டப்பிடாரம் தாலுகாவில் உள்ள பொதுமக்கள், விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்