பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
பாபநாசத்தில் போலீஸ் துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.;
பாபநாசம்;
பாபநாசத்தில் தஞ்சை மாவட்ட போலீஸ் துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். முகாமில்50-க்கும் மேற்பட்ட மனுக்கள் பொதுமக்களிடம் பெறப்பட்டது. முகாமில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, இன்ஸ்பெக்டர்கள் கலைவாணி, மகாலெட்சுமி மற்றும் அதிகாாிகள் கலந்து கொண்டனர்.