சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பொது விருந்து
வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பொது விருந்து நடைபெற்றது.
வள்ளிமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதையொட்டிாலை வள்ளி தெய்வானை சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை, சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் செயல் அலுவலர் திருநாவுக்கரசு தலைமையில் கோவில் வளாகத்தில் பொது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மேல்பாடி ஊராட்சி மன்ற தலைவர் நித்தியானந்தம், வள்ளிமலை ஊராட்சி மன்ற தலைவர் வாசுகி கோடீஸ்வரன், பெருமாள் குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் கோடீஸ்வரன், கோவில் நிர்வாகிகள் மற்றும் நாட்டாமைக்காரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் பொதுமக்கள் கலந்து கொண்டு பொதுவிருந்து சாப்பிட்டனர்.