எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று தொடக்கம்: மாவட்டத்தில் 25,591 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்- முறைகேடு நடப்பதை தடுக்க 162 பறக்கும் படைகள்
ஈரோடு மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 25 ஆயிரத்து 591 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். முறைகேடு நடப்பதை தடுக்க 162 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன.
ஈரோடு மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 25 ஆயிரத்து 591 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். முறைகேடு நடப்பதை தடுக்க 162 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு
தமிழகத்தில் பிளஸ்-2, பிளஸ்-1 பொதுத்தேர்வுகள் நிறைவு பெற்றது. இதையடுத்து எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 119 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இதில் 6 மையங்கள் தனித்தேர்வர்களுக்காக அமைக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் உள்ள 358 பள்ளிக்கூடங்களில் படிக்கும் மொத்தம் 25 ஆயிரத்து 591 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். மேலும், 3 ஆயிரத்து 290 தனித்தேர்வர்கள் எழுதுகிறார்கள். இந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் ஈரோடு, கோபிசெட்டிபாளையம் உள்பட மொத்தம் 7 இடங்களில் வைக்கப்பட்டு உள்ளன. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. அங்கிருந்து வினாத்தாள்கள் போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு இன்று எடுத்து செல்லப்படுகிறது.
பறக்கும் படைகள்
தேர்வு அறைகளை தயார் செய்யும் பணி நேற்று நடைபெற்றது. இதில் வகுப்பறைகளில் மாணவ-மாணவிகள் அமரும் எண்ணிக்கைக்கு ஏற்ப மேஜைகள் போடப்பட்டன. அதில் ஒரு மேஜையில் 2 பேர் அமரும் வகையில் பதிவு எண்கள் ஒட்டப்பட்டன. தேர்வில் முறைகேடுகள் நடப்பதை தவிர்க்கும் வகையில் 162 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த தேர்வு வருகிற 20-ந் தேதி நிறைவு பெறுகிறது. ஈரோடு செங்கோடம்பள்ளத்தில் உள்ள யு.ஆர்.சி. பள்ளிக்கூடம், கோபியில் உள்ள குருகுலம் பள்ளிக்கூடம், சத்தியமங்கலம் ராகவேந்திரா பள்ளிக்கூடம் ஆகிய 3 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடக்கிறது.