பொது இ- சேவை மையம்
செம்பனார்கோவிலில் பொது இ- சேவை மையத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்;
திருக்கடையூர்:
செம்பனார்கோவில் பூம்புகார் தொகுதி எம். எல். ஏ. அலுவலகம் அருகில் பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க தமிழக அரசின் உதவி எண் மற்றும் பொது இ- சேவை மையம் திறப்பு விழா நடந்தது. இதில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பொது இ- சேவை மையத்தை திறந்து வைத்தார். இதில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மயிலாடுதுறை எம். பி. இராமலிங்கம், எம் .எல் .ஏ.க்கள் நிவேதா எம். முருகன், பன்னீர்செல்வம்,ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், தஞ்சை மண்டல தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் ஸ்ரீதர், மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர்கள் அமுர்த விஜயகுமார், அப்துல் மாலிக் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.