சங்கராபுரத்தில்பொதுவினியோக திட்ட குறைதீர்வு முகாம்

சங்கராபுரத்தில் பொதுவினியோக திட்ட குறைதீர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2023-02-11 18:45 GMT


சங்கராபுரம், 

சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் பொதுவிநியோக திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு வட்ட வழங்கல் அலுவலர் ராஜா தலைமை தாங்கினார். முதுநிலை வருவாய் ஆய்வாளர் செங்குட்டுவன் முன்னிலை வகித்தார். தனி ஆய்வாளர் கார்மேகம் வரவேற்றார்.

ரேஷன்கார்டுகளில் புகைப்பட மாற்றம், முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், திருத்தம், செல்போன் எண் மாற்றம் என்று பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 62 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. இதில் 59 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது. 3 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. முகாமில் வட்ட பொறியாளர் அய்யனார், நுகர்வோர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்