பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம்
நெல்லை மாவட்டத்தில் பொது வினியோக திட்ட மக்கள் குறை தீர்க்கும் முகாம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.
பொது வினியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களும் பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பொது வினியோகத்திட்ட மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதத்திற்கான (செப்டம்பர்) முகாம் இன்று (சனிக்கிழமை) அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நடத்தப்படுகிறது.
இந்த முகாமில் புதிதாக ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தல், ரேஷன் கார்டில் செல்போன் எண் பதிவு செய்தல், மாற்றம் செய்தல் உள்ளிட்டவை குறித்து மனு அளிக்கலாம். ரேஷன் கார்டில் பெயர் மாற்றம், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் போன்றவைக்கு விண்ணப்பிக்கும் பயனாளிகள் அதற்கு உரிய ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும்.
இந்த முகாம் மற்றும் பொது வினியோக திட்ட செயல்பாடுகள் குறித்த புகார்களுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக பொது வினியோக திட்ட கட்டுப்பாட்டு அறை எண் 93424 71314-ஐ தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.